தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 'பிளட் டோனர் ஹப்' கருவி கண்டுபிடித்த மாணவர்கள்

 'பிளட் டோனர் ஹப்' கருவி கண்டுபிடித்த மாணவர்கள்

 'பிளட் டோனர் ஹப்' கருவி கண்டுபிடித்த மாணவர்கள்


ADDED : மார் 15, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பி.பி.வி., சாலா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தானம் செய்வோருக்கான கருவியை பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பள்ளியில் இண்டஸ் லேண்ட் பேங்க் பிளாக் ஷிப் ப்ரோக்ராம் அட்டல் டிங்கரிங் லேப் செயல்படுகிறது. இதில் மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள் கிருஷ்ணபிரசாத், குருவிக்னேஷ், முத்து கமலேஷ், மகேஸ்வரி, ராஜலட்சுமி ஆகியோர் 'பிளட் டோனர் ஹப்' என்ற கருவியை கண்டுபிடித்துள்ளனர். பயிற்சியாளர் வெங்கடேஷ் மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்தார்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: மருத்துவமனைகளில் ரத்தம் தேவைக்காக பலர் காத்திருக்கின்றனர். இதுபோல காத்திருக்கும் நோயாளிகள் பற்றி விபரங்கள் நாங்கள் புதியதாக கண்டுபிடித்துள்ள கருவியில் எல்சிடி., திரையில் தோன்றும். இதை பார்க்கும் மக்கள் தங்களது பெயர், ரத்த வகை, அலைபேசி எண் ஆகியவற்றை திரையில் தோன்றும் கேள்விகளுக்கு ஏற்ப பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட அடுத்த நொடியே உடனுக்குடன் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவிற்கு சென்று விடும். இந்த தகவல்களை பார்வையிட்டு உடனடியாக ரத்த தானம் செய்ய விருப்பமுள்ளவர்களை அழைத்து தொடர்பு கொள்ளலாம்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இந்த கருவியை இலவசமாக வைத்துள்ளோம். இங்கு வரும் மக்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்தவுடன் மருத்துவமனையில் இருக்கும் போதே உடனடியாக அவர்களை தொடர்பு கொண்டு ரத்தம் பெற முடியும். இதனால் நேரம் மிச்சப்படும். பொது இடங்களில் இந்த கருவியை வைக்கும் போது ரத்த தானத்தை ஊக்குவிக்க முடியும்.

இதன் மூலம் அவசர சிகிச்சையில் உள்ள கர்ப்பிணி பெண்கள், விபத்தில் அடிபட்டவர்கள் உள்ளிட்ட நோயாளிகள் ரத்தம் பெற காத்திருக்க இருக்க தேவையில்லை. அலைபேசி வழியாகவும் இதை பயன்படுத்த முடியும். இதற்காக கியூஆர்., கோட் உருவாக்கியுள்ளோம். இவற்றை பொது இடங்களில் ஒட்டி வைத்து உடனடியாக தொடர்பு கொள்ளலாம்., என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us