UPDATED : நவ 19, 2026 07:35 PM
ADDED : நவ 19, 2026 07:35 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் உள்ள நகராட்சி பள்ளி அருகில் முட்புதர்கள் பாம்புகளின் கூடாரமாக இருப்பதால் மாணவர்கள் பயத்துடன் வந்து செல்கின்றனர்
அருப்புக்கோட்டை வெங்கடேஸ்வரா நகரில் நகராட்சி உயர்நிலை பள்ளி உள்ளது. 250 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்கு அருகில் முப்புதர்கள், செடி, கொடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால் பாம்புகள் வாழும் கூடாரமாக உள்ளது .சில நாட்களுக்கு முன்பு, மாணவனை பாம்பு கடித்துள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து விடுகிறது. பள்ளி மாணவர்களும் குடியிருப்பு வாசிகளும் பீதியில் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் பள்ளியைச் சுற்றியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். ம
