ADDED : ஜன 24, 2026 06:18 AM

சிவகாசி: சிவகாசியில் கல்லுாரி முதல்வர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலை யில் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் அமைப்பினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி சாட்சியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் மகள் சோலைராணி 19. இவர் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லுாரியில் பொங்கல் கொண்டாட்டத்தின் போது மாணவர்கள் புகைப்படம் எடுத்து உள்ளனர்.
அப்போது மாணவி சோலைராணி ஆண் நண்பருடன் போட்டோ எடுத்தது தொடர்பாக கல்லுாரி முதல்வர் மாணவியை கண்டித்துள்ளார். அதே நாள் இரவு மாணவி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லுாரி முன் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி மரணத்திற்கு காரணமான அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும், என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் சிவகாசி டி.எஸ்.பி., அணில் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
