நேர்மறை சிந்தனைகளை மாணவர்கள் வளர்க்க வேண்டும்: துணை வேந்தர் பஞ்சநாதம் பேச்சு
நேர்மறை சிந்தனைகளை மாணவர்கள் வளர்க்க வேண்டும்: துணை வேந்தர் பஞ்சநாதம் பேச்சு
ADDED : ஏப் 04, 2026 06:17 PM

சிவகாசி:''மாணவர்களால் மிகப்பெரிய சாதனைகளை செய்ய முடியும். நேர்மறையாக சிந்திக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என காந்திகிராம பல்கலை துணை வேந்தர் பஞ்சநாதம் பேசினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியில் நடந்த 22 வது பட்டமளிப்பு விழாவை கல்லுாரி செயலர் செல்வராஜன் துவக்கி வைத்தார். முதல்வர் பாலமுருகன் வரவேற்றார்.
திண்டுக்கல் காந்திகிராம பல்கலை துணை வேந்தர் பஞ்சநாதம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது, ''தாயை விட ஆசிரியர்களே மாணவர்களின் உயர்விற்கு தொண்டாற்றுபவர்கள். பெற்றோரின் தியாகங்களை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவில் உயர் கல்வி படிக்க 28 சதவீதம் மாணவர்கள் மட்டுமே செல்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் உழைப்பு அவசியம். மாணவர்களால் மிகப்பெரிய சாதனைகளை செய்ய முடியும். நேர்மறையாக சிந்திக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.,'' இவ்வாறு அவர் பேசினார். காளீஸ்வரி மேலாண்மை, தொழில்நுட்பவியல் கல்லுாரி இயக்குனர் வளர்மதி, கல்லுாரி இணைச் செயலர் ராஜேஷ் கலந்து கொண்டனர்.
