/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
/
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
ADDED : அக் 20, 2024 06:34 AM
அருப்புக்கோட்டை, : போட்டியான உலகில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அரசு கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவுரை வழங்கினார்.
அருப்புக்கோட்டை அருகே சிட்டிக்குறிச்சியில் அரசு கலை , அறிவியல் கல்லூரியில் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் வரவேற்றார். தொழிலதிபர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மதுரை மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குனர் குணசேகரன் சிறப்புரையாற்றினார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது:
இது போட்டிகள் நிறைந்த உலகம் மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது கூடுதலாக தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய பெற்றோர் பல தியாகங்கள் செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து நீங்கள் பட்டம் வாங்கும் போது பெரு மகிழ்ச்சி அடைகின்றனர். ஆண்கள் பெண்கள் சமம் என்கிறார்கள். அதிக அளவில் பெண்கள் படிக்கின்றனர். ஆண்களும் பெண்களுக்கு நிகராக படிக்க வேண்டும். என, பேசினார்.