ADDED : மார் 02, 2026 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் காமிக்ஸ் நுாலகத்தில் குழந்தை களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி நடந்தது.
ராஜபாளையம் சக்கராஜா கோட்டை ஊர்ப்புற நுாலகத்தில் அமைந் துள்ள இந்தியாவின் முதல் சித்திரக் கதைகள் (காமிக்ஸ்) நுாலகம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
இங்கு குழந்தைகளுக்கான வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளுடன் திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி வகுப்பு வார விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது.
பயிற்சி வகுப்பை நுாலகர் முத்துலட்சுமி, வாசகர் வட்ட தலைவர் மஞ்சு, ஆசிரியர் சக்தி மகேஸ்வரி 30-க்கும் அதிக மான மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். முடிவில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

