/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மானியத்தில் பழ, காய்கறி செடிகள்
/
மானியத்தில் பழ, காய்கறி செடிகள்
ADDED : ஆக 07, 2025 11:15 PM
விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 83 ஊராட்சிகளில் தோட்டக்கலைத்துறை மூலம் எக்டேர் ஒன்றுக்கு 75 சதவீத மானியத்தில் ரூ.7500க்கு வீரிய ஒட்டு காய்கறி விதைகள், இடுபொருட்கள் 107 எக்டேர் பரப்பிற்கும், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ரூ.200க்கு மா, சப்போட்டோ, கொய்யா, நெல்லி, எலுமிச்சை, சீத்தா போன்ற வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு 16 ஆயிரத்து 683, 75 சதவீத மானியத்தில் ரூ.150க்கும், மீதி ரூ.50 பயனாளிகளின் பங்கு தொகையுடன் வினியோகம் செய்யப்பட உள்ளது.
நெட்டை ரக தென்னங்கன்று நுாறு சதவீத மானியத்தில் ரூ.65 வீதம் ரூ.24 ஆயிரத்து 900 வழங்கப்பட உள்ளது.
ஆர்வமுள்ளோர் தோட்டக்கலைத்துறை இணையத்தளத்திலோ அல்லது உழவன் செயலியிலோ அல்லது வட்டார உதவி இயக்குனர்களை அணுகியோ ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம், என்றார்.