ADDED : மார் 05, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பயறு உற்பத்தியை அதிகரிக்க அறுவடைக்கு பின்செய் நேர்த்தி இயந்திரங்களுக்கு 33 சதவீதம் மானியம் வழங்கப் படுகிறது. இதில் அதிக பட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் தொகுப்பு அளவிலான கூட் டமைப்புகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனி நபர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். மானியம் பெற தகுதியானவர்கள், விருதுநகர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.
