/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் இட நெருக்கடியில் நூலகங்கள்; வீணாகும் புத்தகங்கள் சிரமத்தில் வாசகர்கள்
/
மாவட்டத்தில் இட நெருக்கடியில் நூலகங்கள்; வீணாகும் புத்தகங்கள் சிரமத்தில் வாசகர்கள்
மாவட்டத்தில் இட நெருக்கடியில் நூலகங்கள்; வீணாகும் புத்தகங்கள் சிரமத்தில் வாசகர்கள்
மாவட்டத்தில் இட நெருக்கடியில் நூலகங்கள்; வீணாகும் புத்தகங்கள் சிரமத்தில் வாசகர்கள்
UPDATED : ஏப் 27, 2025 08:46 AM
ADDED : ஏப் 27, 2025 06:45 AM

இன்றைய அறிவியல் , த்கவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இளைய தலைமுறையினர் அரசு பணிக்கு செல்வதற்காக நூலகங்களுக்கு சென்று போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகமும், தாலுகாவில் கிளை நூலகங்கள், கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஊர்ப்பபுற நூலகங்களும் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் அரசு தேர்விற்கு படித்து வருகின்றனர். இவ்வாறு வருபவர்களுக்கு உட்கார்ந்து படிக்க போதிய இடவசதி இல்லாதநிலை காணப்படுகிறது. கிராமங்களில் உள்ள பல ஊர்ப்புற நூலக கட்டடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. புத்தகங்கள் வைக்க ரேக் வசதிகள் இல்லாமல் தரையில் வைக்கப்பட்டு, வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
மேலும், பல நூலகங்களுக்கு சொந்த கட்டடங்கள் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்கிவருகிறது. சொந்த இடம் தர வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஒத்துழைப்பதில்லை. ஸ்ரீவில்லிபுத்தூரில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் அரசு கிளை நூலகம் சொந்த இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள நூலகத்தில் கூடுதல் இடவசதி செய்ய முடியவில்லை. வத்திராயிருப்பு தாலுகாவில் சில கிராமங்களில் உள்ள நூலகங்களில் இடநெருக்கடி காணப்படுகிறது.
பெரும்பாலான நூலகங்களில் இடவசதி இல்லாத நிலையில், ஏராளமான புத்தகங்கள் தரையில் வைக்கப்பட்டு பூச்சிகளால் வீணாகும் நிலை உள்ளது. இதேபோல் பர்னிச்சர் பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதேபோல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஊராட்சிகள் தோறும் உள்ள நூலகங்களில் முழுநேர ஊழியர்கள் இல்லாமல் பல இடங்களில் மூடி கிடக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் கிராமங்களில் நூலகம் துவக்கபட்டதின் நோக்கம் சிதையும் நிலை உள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள நூலகத்துறை நூலகங்கள், ஊராட்சிகளில் உள்ள ஊர்ப்புற நூலகங்கள் ஒவ்வொன்றையும் கலெக்டர் நேரடி ஆய்வு செய்து சொந்த இடம், நிரந்தர கட்டடம், புத்தகங்கள் வைப்பதற்கான ரேக்குகள், வாசகர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர்.