/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி
/
மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி
ADDED : ஏப் 14, 2025 04:53 AM

விருதுநகர், ஏப். 14-
விருதுநகர் மாவட்ட கத்தோலிக்க சர்ச்சுகளில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு குருத்தோலை பவனி, திருப்பலி நடந்தன. கிறிஸ்தவர்கள் பலர் பங்கேற்றனர்.
இன்னாசியார் சர்ச்சில் விருதுநகர் மறைமாவட்ட அதிபர் அருள்ராயன், உதவி பாதிரியார் தேவராஜ் தலைமையில் புனிதப்படுத்தப்பட்ட குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு பவனி சென்றனர். சர்ச்சில் தொடங்கி நகராட்சி அலுவலகம், ரயில்வே மேம்பாலம், அருப்புக்கோட்டை ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை வழியாக சர்ச் வந்தனர். அதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தன.
பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் மரிய ஜான் பிராங்க்ளின், எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம் ஆகியோர் தலைமையில் அண்ணாநகர் புனித அந்தோணியார் சர்ச்சில் இருந்து ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் வழியாக பவனி சென்றனர்.
இதேபோல், நிறைவாழ்வு நகர் புனித ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந்தோணிசாமி, ஆர்.ஆர்.நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார் பீட்டர் ராய், உதவி பாதிரியார் சாமிநாதன், அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் அந்தோணி பாக்கியம், சிவகாசி புனித லுார்து அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜான் மார்ட்டின், சாத்துார் இருதய ஆண்டவர் சர்ச்சில் பாதிரியார் காந்தி, சாத்துார் ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு சர்ச்சில் பாதிரியார் ஜான் மில்டன் தலைமையில் குருத்தோலை பவனி, சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தன.
ஸ்ரீவில்லிபுத்துாரில் கிறிஸ்தவ ஐக்கிய குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. இதில் ஏராளமான கிறித்துவ மக்கள் குருத்தோலை ஏந்தி சி.எஸ்.ஐ. சர்ச் வந்தடைந்தனர். குருசேகர தலைவர் பால் தினகரன் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. அத்திகுளம் சி.எஸ். ஐ. சர்ச்சில் குருத்தோலை ஞாயிறு பவனி சபை குரு அருள் தனராஜ் தலைமையில் நடந்தது.