/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சூப்பர் ரிப்போர்ட்டர்: ஆக்கிரமிப்பால் குறுகிய மெயின் ரோடு, நாய் தொல்லை *சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் ஆக்கிரமிப்பால் குறுகிய மெயின் ரோடு, நாய்த்தொல்லை

ADDED : செப் 07, 2025 02:42 AM

காரியாபட்டி: பஸ் ஸ்டாண்ட், மதுரை அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பால் ரோடு குறுகலாகி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது, வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து குறுக்கும் நெடுக்குமாகவும், கிடப்பதால் நடந்து செல்பவர்கள் இடறி விழுவது, தெரு நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகமாக இருப்பதால் காரியாபட்டி பேரூராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டியில் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஜார், முக்கு ரோடு வரை மதுரை அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் ஆக்கிரமித்து கடை, டூவீலர், கார், மினி வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதால் ரோடு குறுகலாகி போக்குவரத்திற்கு பெரிதும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. ஆட்கள் நடந்து செல்ல இடம் இல்லாததால், நடு ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்கள் விலகிச் செல்ல முடியாமல் ஓட்டுனர்கள் தவியாய் தவிக்கின்றனர்.
முக்கு ரோடு, கள்ளிக்குடி ரோடு, பஜார் பகுதி, பஸ் ஸ்டாண்ட், செவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக ஓடுவதால் விபத்து ஏற்படுகிறது.
சிறுவர்கள் நடமாட அச்சப்படுகின்றனர். அதேபோல் பன்றிகள் நடமாட்டம் உள்ளன. குடியிருப்புகளுக்குள் நடந்து செல்லும் போது துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் முகம் சுளிக்கின்றனர்.
வீதிகளில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாததால் பெரும்பாலான வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் சேதம் அடைந்து குறுக்கும் நெடுக்குமாகவும் கிடப்பதால் நடந்து செல்பவர்கள் இடறி விழுகின்றனர்.
நாய்கள், பன்றிகள் தொல்லை சரத், தனியார் ஊழியர்: நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. ரோட்டில் குறுக்கும், நெடுக்குமாக சுற்றித் திரிகின்றன.
டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். பன்றிகள் நடமாட்டம் உள்ளன. குடியிருப்புகளுக்குள் சுற்றி திரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்புறப்படுத்த வேண்டும் பாஸ்கரன், விவசாயி: ரோட்டோர ஆக்கிரமிப்பால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. ஆட்கள் விலகிச் செல்ல இடமில்லாமல் நடு ரோட்டில் நடந்து செல்கின்றனர்.
விபத்து அச்சம் இருப்பதால் நடமாட பயப்படுகின்றனர்.
தாலுகா அலுவலகம் எதிரில் புளிய மரம் வெட்டப்பட்டு அதன் வேர் அகற்றப்படாமல் நீண்ட நாட்களாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. ஆக்கிரமிப்பு, வேரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெயர்ந்து நிற்கும்பேவர் பிளாக் கற்கள் பாலமுருகன், தனியார் ஊழியர்: ஜல் ஜீவன் திட்டத்திற்காக வீதிகளில் பள்ளம் தோண்டப்பட்டது. சரிவர மூடாததால் பேவர் பிளாக் கற்கள் குறுக்கும், நெடுக்குமாக உள்ளது. இரவில் நடந்து செல்பவர்கள் இடறி விழுகின்றனர்.
வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.