ADDED : செப் 08, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.17 லட்சத்திற்கு பேரிடர் கால மீட்புக் கருவிகளை மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்கு கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.
பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்திற்கு பாதுகாப்பு உபகரணங்களான தலைக்கவசம், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், தீயணைப்பான்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் போது, மீட்பு பணிகளின் பயன்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படும் ட்ரோன்கள், வாக்கி டாக்கிகள் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு தீயணைப்புத்துறையினர் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.
மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரகுமார், தாசில்தார் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.