ADDED : மார் 19, 2024 05:38 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் 78 தனி நபர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் மீண்டும் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்னிலும் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் உரிய அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்த 79 பேர், உடனடியாக தங்களது துப்பாக்கிகளை திரும்ப சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இதனையடுத்து 78 பேர் நேற்று தங்களது துப்பாக்கிகளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். வெளியூர் சென்ற ஒருவர் இன்று தனது துப்பாக்கியை ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட துப்பாக்கிகள், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
