/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மெப்கோ கல்லுாரியில் தமிழ் கனவு கருத்தரங்கம்
/
மெப்கோ கல்லுாரியில் தமிழ் கனவு கருத்தரங்கம்
ADDED : ஆக 30, 2025 05:37 AM

சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில், கல்லுாரி நிர்வாகம், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் மாபெரும் தமிழ் கனவு கருத்தரங்கம் நடந்தது.
கலெக்டர் சுகபுத்திரா தலைமை வகித்தார் கல்லூரி முதல்வர் அறிவழகன் முன்னிலை வகித்தார். கவிஞர் பிரியதர்ஷினி பேசினார்.
தமிழகத்தில் கல்லுாரி மாணவர்களிடையே தமிழ் மரபு, பண்பாடு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமத்துவ வளர்ச்சி, சமூக பொருளாதார முன்னேற்றம் குறித்த புரிதலை ஏற்படுத்தி அவர்களை அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் தமிழ் இளைஞர்களின் நல்வழிப்படுத்தி வளமை மிக்க சமூகத்தை கட்டமைக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி நடந்தது.
இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 200 இடங்களில் 200 சொற்பொழிவாளர்கள் மூலம் 2000 கல்லுாரிகளைச் சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் விஜயராணி, டி.ஆர்.ஓ.,ராஜேந்திரன், மாணவர்கள் கலந்து கொண்டனர்.