/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுகாதாரத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது
/
சுகாதாரத்தில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது
ADDED : ஜூலை 09, 2025 01:07 AM
நரிக்குடி : நாட்டில் சுகாதாரத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது என மருத்துவ சேவைகளை துவக்கி வைத்து, அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
நரிக்குடி இலுப்பையூரில் ரூ.1கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை துவங்கி வைக்கும் நிகழ்ச்சி கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் கடைக்கோடி மக்களுக்கும் மருத்துவ சேவைகள் சென்றடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம், சேவைகள் பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்திய அளவில் சுகாதாரத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. 30 கி.மீ., தூரம் உள்ள திருச்சுழி, நரிக்குடி, கமுதி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு சென்று வந்ததால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
அதன் அடிப்படையில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.