தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மழைநீர் ஓடையில் கொட்டப்பட்ட தார் கழிவுகள்

மழைநீர் ஓடையில் கொட்டப்பட்ட தார் கழிவுகள்

மழைநீர் ஓடையில் கொட்டப்பட்ட தார் கழிவுகள்


ADDED : செப் 25, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை, செப். 26-

அருப்புக்கோட்டை அருகே புதிய ரோடு அமைக்க, தோண்டி எடுக்கப்பட்ட பழைய ரோடு தார் கழிவுகளை நீர்வரத்து ஓடையில் கொட்டியதால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது.

அருப்புக்கோட்டையில் இருந்து சுக்கில நத்தம், திருவிருந்தாள்புரம், வெள்ளை யாபுரம், ஆமணக்குநத்தம் வழியாக இருக்கன்குடி செல்லும் ரோடு உள்ளது. இதில், தினமும் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும். ரோடு பல பகுதிகளில் குண்டும் குழியுமாக இருந்ததால் புதியதாக ரோடு அமைக்கும் பணி ஒரு ஆண்டிற்கு முன்பு நடந்தது.

இதில், பழைய ரோட்டை பெயர்த்து எடுத்த தார் கழிவுகளை ரோடு ஓரங்களில் குவித்து விட்டனர். திருவிருந்தாள்புரம், வெள்ளையாபுரம் பகுதிகளில் உள்ள ரோட்டின் அருகே உள்ள நீர் வரத்து ஓடையில் கொட்டி உள்ளதால், மழை நீர் செல்ல முடியாமல் உள்ளது. அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்ல முடியாமல் தடைபட்டுள்ளது. ரோடு ஓரங்களிலும் ஆங்காங்கு தார் கழிவுகளை கூட்டி உள்ளதால் டூவீலர்கள் தடுமாறிச் செல்ல வேண்டி உள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர் ரோடு ஓரங்களை சம படுத்தவும், நீர்வரத்து ஓடைகளில் கொட்டி உள்ள தார் கழிவுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us