/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வரத்து ஓடையில் தார் கழிவுகள் விவசாயம் பாதிக்கும் அபாயம்
/
வரத்து ஓடையில் தார் கழிவுகள் விவசாயம் பாதிக்கும் அபாயம்
வரத்து ஓடையில் தார் கழிவுகள் விவசாயம் பாதிக்கும் அபாயம்
வரத்து ஓடையில் தார் கழிவுகள் விவசாயம் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜன 27, 2025 06:42 AM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அழகியநல்லுார் ரோட்டின் தார் கழிவுகள் அருகே உள்ள நீர்வரத்து ஓடையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வரத்து தடைப்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் இருந்து அழகியநல்லுார் செல்லும் ரோடு சேதமான நிலையில் இருந்தது. இந்த ரோட்டை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு புதிதாக தார் ரோடு அமைக்கும் பணிகள் நடந்தது. இதற்காக சேதமான ரோடு பகுதிகளை பெயர்த்து எடுத்து ரோட்டின் ஓரங்களில் கொட்டி வைத்தனர். பணிகள் முடிந்ததும் தார் கழிவுகளை அகற்ற முடிவு செய்தனர்.
ஆனால் பணிகள் முடிந்து மாதங்களை கடந்தும் இதுவரை ரோடு ஓரத்தில் கிடந்த தார் கழிவுகள் அகற்றப்படவில்லை. மாறாக தற்போது தார் கழிவுகள் நீர்வரத்து ஓடையில் கொட்டபட்டுள்ளது. அழகியநல்லுார், சுற்றிய பகுதிகளில் எள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீர்வரத்து ஓடையில் தார் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் தடைப்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தார்கழிவுகளை முறையாக அகற்றாத ஒப்பந்ததாரர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.