தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அமைச்சர் அறிவுறுத்தியும் அகற்றப்படாத டாஸ்மாக்

 அமைச்சர் அறிவுறுத்தியும் அகற்றப்படாத டாஸ்மாக்

 அமைச்சர் அறிவுறுத்தியும் அகற்றப்படாத டாஸ்மாக்


ADDED : மார் 18, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: மார்ச் 18- -: அருப்புக்கோட்டையில் கோயில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடையினால் பக்தர்கள், மக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அறிவுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதால், தொடர்ந்து இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் அமுத லிங்கேஸ்வரர் கோயில், ஆழாக்கு அரிசி விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில், மசூதி, மருத்துவமனைகள், மெடிக்கல் ஷாப் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இந்த ரோட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வர். தினமும் இந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டமாணவியர்கள் வந்து செல்கின்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் குடி மகன்கள் குடித்துவிட்டு ரோட்டிலேயே படுத்து விடுகின்றனர். கடைக்கு அருகிலேயே உட்கார்ந்து குடிக்கின்றனர்.

கோயிலுக்கு ரோடு வழியாக செல்லும் பெண்களுக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது. பள்ளி மாணவிகள் பயந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது.இதுகுறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு வந்த புகாரை அடுத்து டிசம்பர் மாதம் டாஸ்மாக் அதிகாரிகளிடம் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அறிவுரை அறிவுறுத்தினார்.

ஆனாலும் அதிகாரிகள் கடையை மாற்றுவதற்கு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் சொல்லியும் மெத்தனம் காட்டுகின்றனர்.

தற்போது கோயில்களில் பங்குனி பொங்கல் விழாக்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த ரோட்டில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

டாஸ்மாக் கடையால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடையை மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us