ADDED : டிச 02, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி காளீஸ்வரி கல்லுாரியின் உள் தர உத்தரவாத அமைப்பு சார்பில் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் மனவளக்கலை, யோகா, ஏரோபிக் உடற்பயிற்சி, புத்தக மதிப்புரை, திரைப்பட மதிப்புரை, கைப்பந்து, கூடைப்பந்து மட்டைப்பந்து, சுண்டாட்டம், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்தது.
யோகா பயிற்றுநர் பாலாஜி, ஏரோபிக் உடற்பயிற்சி பயிற்றுநர்கள் மணிகண்டன், சுபா, பயிற்சி அளித்தனர். ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்பட்டு ஆசிரியர்களால் மதிப்புரை வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 172 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உள் தர உத்தரவாத அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரியா செய்தார்.