ADDED : டிச 20, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்:ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் 5 நாள் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கல்லூரியின் மின்னணு, தொடர்பியல், மின்னணு பொறியியல் துறை சார்பில் ஐ.சி. டி அகாடமி உடன் இணைந்து ஆசிரியர்களுக்கான வி.எல்.எஸ்.ஐ வடிவமைப்பு மற்றும் செயல்முறைகள் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன் தலைமை வகித்தனர். தீபலட்சுமி ஒருங்கிணைத்தார். ராம்கோ உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

