/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : நவ 28, 2025 08:00 AM
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் அகத்தர உறுதிப்பாட்டு மையம் சார்பில் செயற்கை நுண்ணறிவு வாயிலான பாரம்பரிய கற்பித்தலை கடந்த புதிய வழிமுறைகள் என்ற தலைப்பில் இணைய வழியில் பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி ஐந்து நாட்கள் நடந்தது.
கல்லுாரி தலைவர் திலகவதி, செயலாளர் அருணா முன்னிலை வகித்தனர். முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். அகத்தர உறுதிப்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் தேவி ஆரோக்கிய வனிதா வரவேற்றார்.
கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை கணினி அறி வியல் துறை பேராசிரியர் சந்தோஷ் குமார், தமிழ்நாடு மத்திய பல்கலை கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் நந்தினி, திண்டுக்கல் எம்.வி. முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லுாரி நுாலகர் ராமசாமி, திருச்சி ஜெயின் ஜோசப் கல்லுாரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் விமல் ஜெரால்ட், அமெரிக்கா ஹோலி பெர்பார்மன்ஸ் பிராண்ட்ஸ் பவுலிங் கிரீன் கென்டக்கி நிறு வனர் முத்து ரவிசங்கர் பேசினர்.
தமிழக முழுவதும் உள்ள பல்வேறு கல் லுாரிகள், இந்தியா மற்றும் வெளிநாட்டில் இருந்து 204 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். அகத் தர உறுதிப்பாட்டு மையம் இணை ஒருங்கிணைப்பாளர் சிவப்பிரியா நன்றி கூறினார்.

