ADDED : ஜன 24, 2025 01:47 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் வெள்ளையப்பன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 38 .தனியார் பள்ளியில் கணினி ஆசிரியராக பணிபுரிந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நஷ்டமடைந்தார். இதற்காக வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் இருமுறை வீட்டை விட்டு வெளியேறி மீண்டும் வீடு திரும்பினார்.
ஒரு மாதத்திற்கு முன் பணிக்கு செல்லாமல் வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வந்தார். பொங்கல் விடுமுறையால் வீட்டில் தனியாக இருந்தவர் ஜன.16 மதியம் 3:00 மணிக்கு விஷம் குடித்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
