ADDED : செப் 05, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், செப். 6-
மல்லி சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடந்தது.
கல்லூரி தாளாளர் திலீபன் ராஜா தலைமை வகித்தார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். கல்லூரி நிர்வாகி தர்மராஜ் ஆசிரியர் தின சிறப்புகள் குறித்து பேசினார்.
பேராசிரியர் ராஜ்குமார் தலைமையில் நல்ல மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் அன்பா, கண்டிப்பா என்ற தலைப்பில் பட்டிமன்றமும், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. மாணவர்கள் சார்பில் பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
