ADDED : செப் 06, 2026 04:10 PM
வத்திராயிருப்பு, செப்.7-
வத்திராயிருப்பு இந்து ஹை ஸ்கூல் சத்திரம் கமிட்டி சார்பில் ஆசிரியர் தின விழா பள்ளி தலைவர் ஜானகி தலைமையில் நடந்தது.
நிதி கமிட்டி தலைவர் சுந்தர்ராஜன், நிர்வாக குழு உறுப்பினர் பீமா ராவ், பொதுக்குழு உறுப்பினர்கள் பாகம் பிரியாள், சாவித்திரி பங்கேற்று ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினர்.
விழாவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகரன், பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
* மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் வ.உ.சி. பிறந்தநாள் விழா தாளாளர் குருவலிங்கம் தலைமையில் நடந்தது. அறங்காவலர்கள் சித்ரா மகேஸ்வரி, பூங்கொடி, முதல்வர் சிவப்பிரியா பங்கேற்றனர். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களுக்கு சிறு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
