ADDED : ஜூலை 23, 2026 12:12 AM

அ நிறம் | அளவு
விருதுநகர்: பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டாரச்செயலாளர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆறுமுகம், வட்டார பொருளாளர் தர்மலிங்கம் பேசினர். ராஜபாளையம்,நரிக்குடி, வெம்பக்கோட்டை, சாத்துார், வத்திராயிருப்பு வட்டாரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும்தற்போது நடந்து முடிந்த தேர்வுக்கு அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் 40 சதவீதம் என நிர்ணயித்து பணிக்காலத்தைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வலியுறுத்தினர்.
