ADDED : டிச 15, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் ,இந்திய எலெக்ட்ரானிக்ஸ் செமி கண்டக்டர் அசோசியேஷன் சார்பில் தகவல் செயலாக்கத்தில் நிலையான பொருட்கள் , தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணை தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், துறை தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். டீன் சிவக்குமார் வரவேற்றார்.
டெசால்வ் செமி கண்டக்டர் அசோசியேஷன் தலைவர் வீரப்பன் ஆய்வு கட்டுரை மலரை வெளியிட்டு பேசினார். கருத்தரங்கில் டாக்டர் நிஷு குப்தா, விஞ்ஞானி சேத்தன் உட்பட பல்வேறு வெளிநாட்டு நிறுவன உயரதிகாரிகள் பங்கேற்றனர். பேராசிரியர் பென்னிலோ பெமாண்ட்ஸ் நன்றி கூறினார்.