ADDED : அக் 11, 2025 03:45 AM

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி கணினி அறிவியல் துறையின் கணினி இயந்திரங்கள் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு தேசிய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் நெக்ஸ்னிவல் 25 என்ற தலைப்பில் நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி துவக்கி வைத்தனர். ஸ்கில்மைன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் மென்பொறியியல் இயக்குனர் விமல் பிரகாஷ் பேசினார்.
தொடர்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடி கேள்விகளுக்கு பதில் அளித்தார். பல்வேறு பொறியியல் கல்லூரியில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறை தலைவர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர்கள் ராமதிலகம், பழனிக்குமார், கவிதா செய்தனர்.