ADDED : மார் 20, 2026 05:16 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் ஒரு நாள் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு 'டெக்னோவா 26' நடந்தது. முதல்வர் செந்தில் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்கள் செந்தில்குமார், இந்திரஜித், சக்திவேல் ஆகியோர்
மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றம், புதுமை சிந்தனை, தொழில் துறைக்கு தயாராகும் திறன் குறித்து பேசினர். செயலாளர் மகேஷ்குமார் வாழ்த்தினார். பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மெக்கானிக்கல் துறைத் தலைவர் தங்க காசி ராஜன் நன்றி கூறினார்.
