/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் சாய்ந்த நிலையில் டெலிபோன் கம்பம்: அச்சத்தில் மக்கள்
/
சாத்துாரில் சாய்ந்த நிலையில் டெலிபோன் கம்பம்: அச்சத்தில் மக்கள்
சாத்துாரில் சாய்ந்த நிலையில் டெலிபோன் கம்பம்: அச்சத்தில் மக்கள்
சாத்துாரில் சாய்ந்த நிலையில் டெலிபோன் கம்பம்: அச்சத்தில் மக்கள்
ADDED : நவ 24, 2024 06:51 AM

சாத்துார் : சாத்துாரில் சிவன் கோயில் வடக்கு மாட வீதியில் நடை பாதையில் சாய்ந்து கிடக்கும் டெலிபோன் கம்பத்தால் விபத்து அச்சத்தில் உள்ளனர்.
சாத்தூர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் இருந்து வடக்கு மாட வீதிக்கு செல்லும் வழியில் டெலிபோன் கம்பம் இருந்தது. இதிலிருந்து தொலைபேசி இணைப்புகள் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு வழங்கப்பட்டது.த ற்போது தொலைபேசி இணைப்புகள் பயன்பாட்டில் இல்லாத நிலையில் டெலிபோன் மின்கம்பத்தின் அடிப்பகுதி துருபிடித்து போன நிலையில் 10 நாட்களுக்கு முன்பு இந்த கம்பம் திடீரென சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.
இப்பகுதியில் உள்ள வியாபாரிகள் டெலிபோன் கம்பத்தை எடுத்து அப்பகுதியில் உள்ள கடைக்கு அருகே நடைபாதியில் போட்டனர்.
கம்பத்துடன் பூமிக்குள் இருந்து வரும் கேபிள் இணைக்கப்பட்டு இருப்பதால் இதை தனியாக பிரித்து எடுக்க முடியவில்லை.
ஆனால் சாலையின் விலக்கில் நீட்டி கொண்டிருப்பதால் நடந்து செல்லும் பாதசாரிகள் கால்களை பதம் பார்த்து வருகிறது. மேலும் சமூக விரோதிகள் கம்பத்தை திருடிச் செல்லும் வாய்ப்பும்உள்ளது.
எனவே பி.எஸ்.என்.எல். நிர்வாகத்தினர் சாய்ந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ள டெலிபோன் கம்பத்தை அகற்ற வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.