ADDED : செப் 18, 2026 12:12 AM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் உள்ள தீப்பாஞ்ச நாச்சியாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி, கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. முதல் நாள் பூஜை பெட்டியுடன் நகர்வலம் வந்து சங்கரகனம் நடந்தது. மாலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, பஞ்சாசன பஞ்சமாவர்ண பூஜை, வேதபாராயணம், லலிதா சகசர நாம அர்ச்சனை, எந்திர ஸ்தாபனம் நடந்தது.
இரவு அஷ்டபந்தனம் மருந்து சான்றுதல் நடந்தது. நேற்று காலை மகாபூர்ணகுதி தீபாராதனையுடன், யாகசாலை கடங்கள் புறப்பாடு, அதை யடுத்து, கும்பாபிஷேகம் நடந்தது.
