/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பராமரிப்பு இன்றி அழிந்து வரும் வேளாண் குளம் கண்மாய்
/
பராமரிப்பு இன்றி அழிந்து வரும் வேளாண் குளம் கண்மாய்
பராமரிப்பு இன்றி அழிந்து வரும் வேளாண் குளம் கண்மாய்
பராமரிப்பு இன்றி அழிந்து வரும் வேளாண் குளம் கண்மாய்
ADDED : ஏப் 05, 2025 06:11 AM

திருச்சுழி: திருச்சுழி கல்லூரணி அருகே வேளாண் குளம் கண்மாய் பராமரிப்பு இன்றி கரைகள் கரைக்கப்பட்டு குவாரி லாரிகள் சென்று வருவதால் கண்மாய் அழிந்து வரும் நிலையில் உள்ளது.
திருச்சுழி அருகே கல்லூரணி - மீனாட்சிபுரம் ரோட்டில் வேளாண் குளம் கண்மாய் உள்ளது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கண்மாய், முன்பு கண்மாயை சுற்றி உள்ள 120 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி தந்தது.
நெல், உளுந்து, மக்காச்சோளம் பயிரிடப்பட்டன. குடிப்பதற்கு கண்மாய் நீரை இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மீனாட்சிபுரம் பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் உள்ளது. இவற்றில் இருந்து ஜல்லிகள் கற்கள் சூசுமண் உள்ளிட்டவை டன் கணக்கில் கனரக வாகனங்களில் மூலம் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
கல்லூரணி வழியாக சுற்றி செல்வதால் எரிபொருள் நேரம் அதிகமாக தான் குவாரிக்காரர்களின் பார்வையில் இந்த கண்மாய்பட்டது.
உடன் கண்மாய் கரையை கரைத்து ரோடு அமைத்து இதன் வழியாக நூற்றுக்கணக்கான லாரிகள் தினமும் வந்து செல்கின்றன. இதனால் மழைநீர் வரத்து ஓடைகள் அடைபட்டு போனவுடன் கண்மாய்க்கு வரும் நீர் வரத்து குறைந்து போனது.
கண்மாயை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயிகள் கண்மாயின் கரையில் ரோடு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோர்ட்டில் வழக்கு தொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
கண்மாயில் தண்ணீர் குறைந்து போனதால் விவசாயம் செய்ய முடியாமல் போனது.
மேலும் வரிசை கட்டி லாரிகள் செல்வதால் கிளம்பும் புழுதி அருகில் உள்ள தனியார் பள்ளி மற்றும் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் புழுதி காடாக மாறிவிடுகிறது.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து வேளாண் குளம் கண்மாயை பராமரித்து மழைநீர் சேகரமாகும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.