/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முடுக்கன்குளத்தில் சிதிலமடைந்த பழமையான சிவன் கோயில்
/
முடுக்கன்குளத்தில் சிதிலமடைந்த பழமையான சிவன் கோயில்
முடுக்கன்குளத்தில் சிதிலமடைந்த பழமையான சிவன் கோயில்
முடுக்கன்குளத்தில் சிதிலமடைந்த பழமையான சிவன் கோயில்
ADDED : மே 04, 2025 04:59 AM
காரியாபட்டி : காரியாபட்டி முடுக்கன்குளத்தில் பழமையான சிதிலமடைந்து வரும் சிவன் கோயிலை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். புனரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
ராவணனை திருமணம் செய்ய மண்டோதரி தவமிருந்த புண்ணிய ஸ்தலம். மகா சிவராத்திரி அன்று காலை சூரிய கதிர்கள் சிவன் மீது பட்டு வணங்கும் அதிசயம். சூரிய வெளிச்சம் படாது அமைக்கப்பட்ட தீர்த்த கிணறு. திருமணம் ஆகாதவர்கள் சுவாமியை தரிசித்து வந்தால் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட, இக்கோயில், 800 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் மாறவர்ம பாண்டியன் காலத்தில் காரியாபட்டி முடுக்கன்குளம் கட்டப்பட்டது. தற்போது சிதிலமடைந்து கட்டடங்கள், கற்கள் உடைந்து காணப்படுகிறது.
ராமநாதபுரம் சமஸ்தானம் நிர்வகித்து வருகிறது. பராமரிப்பு பணிகளை செய்ய முன் வரவில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. முற்றிலும் இடிந்து விழுமோ என்கிற அச்சத்தில் பக்தர்கள் உள்ளனர். இக்கோயிலின் சிறப்புகளை பாதுகாக்க அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் நேற்று கலெக்டர் ஜெயசீலன் கோயிலை ஆய்வு செய்தார். அறநிலைத்துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதுடன், கோயிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தினர். தாசில்தார் மாரீஸ்வரன், பி.டி.ஓ., கள் ஜெயராம், உஷா உட்பட பலர் உடன் இருந்தனர்.

