ADDED : செப் 08, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் மடத்தின் 24வது பீடாதிபதி சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உலக நன்மைக்காகவும், தேச வளர்ச்சிக்காகவும், பக்தர்கள் நலனுக்காகவும் 2 மாத சாதூர் மாஸ்ய விரதத்தை நேற்று முதல் துவக்கியுள்ளார்.
இதனை முன்னிட்டு நேற்று காலை மடத்தில் வேத சங்கல்பம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஜீயர் சுவாமிக்கு ஆண்டாள் கோயில் மாலை, பரிவட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.