/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காலிப்பணியிடங்களை ஒப்பந்தம் மூலம் நிரப்புவதை அரசு கைவிட வேண்டும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்
/
காலிப்பணியிடங்களை ஒப்பந்தம் மூலம் நிரப்புவதை அரசு கைவிட வேண்டும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்
காலிப்பணியிடங்களை ஒப்பந்தம் மூலம் நிரப்புவதை அரசு கைவிட வேண்டும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்
காலிப்பணியிடங்களை ஒப்பந்தம் மூலம் நிரப்புவதை அரசு கைவிட வேண்டும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்
ADDED : அக் 29, 2025 02:44 AM
விருதுநகர்: 'தமிழகத்தில் மின் வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர்கள் வரையிலான பணியிடங்களுக்குத் தேவையான நபர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் உரிமை தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்,' என, சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியது.
சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மின் வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர்கள் வரையிலான பணியிடங்களுக்கு தேவையான நபர்களை ஒப்பந்த முறையில் வழங்கும் உரிமை தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசுத்துறைகளுக்குத் தேவையான பணியாளர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படாமல், எந்தெந்தப்பணிகளுக்கு எவ்வளவு பேர் தேவை என்பதை இந்நிறுவனத்திடம் தெரிவித்தால் அவர்களே அனுப்புவர்.
ஊதியம் அடிப்படை பணியாளர்களான அலுவலக உதவியாளர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரருக்கு ரூ.13 ஆயிரமும், அலுவலக மேலாளர், அதற்கு இணையான பணியாளர்களுக்கு அதிகபட்ச ஊதியமாக ரூ.40 ஆயிரமும் வழங்கப் படுகிறது.
இந்த புதிய முறைப்படி சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசு அலுவலகங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து விருதுநகரில் சி.ஐ.டி.யு., மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத்துணைச் செயலாளர் சந்திரன் கூறியதாவது: மின் வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் இந்நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது நியாயமற்றது. இது சமூக நீதிக்கு எதிரான, ஆபத்தான போக்கு. அரசுப்போக்குவரத்துக் கழகங்கள், அரசு அலுவலகங்கள், பல்கலைகள், பள்ளிகள் போன்றவற்றில் நான்கரை ஆண்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் குத்தகை முறையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த நியமனங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்ப மாநில அரசு அனுமதி அளித்ததை திரும்ப பெற்ற வேண்டும் என்றார்.

