/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரவார்பட்டி - அச்சங்குளம் பாலம் சேதம் 20 ஆண்டுகளாக 10 கிராம மக்கள் அவதி

ADDED : ஏப் 05, 2025 06:11 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் இரவார்பட்டி அச்சங்குளம் இடையே வைப்பாற்றில் கட்டப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் 20 ஆண்டுகளாக 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர்.
இப்பகுதியில் இரவார் பட்டி அச்சங்குளம் கோட்டைப்பட்டி சூரார்பட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு அதிக அளவில் பட்டாசு ஆலைகள், விவசாய நிலங்கள் உள்ளன. இவர்களின் போக்குவரத்திற்காக இரவார் பட்டி அச்சங்குளம் இடையே 20 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றில் தரைப்பாலம் கட்டப்பட்டது.
இதன் வழியே 10 கி.மீ., துாரத்திலேயே ஏழாயிரம் ஆயிரம் பண்ணை, வெம்பக்கோட்டை செல்ல முடியும். ஆனால் கட்டப்பட்ட ஒரு ஆண்டிலேயே தரைப்பாலம் முழுமையாக சேதம் அடைந்து விட்டது.
இதனால் டூவீலர் உட்பட எந்த வாகனங்களும் சென்று வர முடியவில்லை. ஆற்றை கடந்து நடந்து மட்டுமே செல்ல முடியும்.
தற்போது மழை பெய்து தண்ணீர் வருவதால் நடந்து செல்லவும் வழியில்லை. இதனைத் தொடர்ந்து இப்பகுதியினர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 20 கிலோ மீட்டர் சுற்றியே ஏழாயிரம் பண்ணை, சாத்துார் வெம்பக்கோட்டைக்கு செல்ல முடிகின்றது.
எனவே இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.