/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் இரவு நேரத்தில் மழை வத்திராயிருப்பில் 22.80 மி.மீ., பதிவு

ADDED : அக் 24, 2024 04:37 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து தொடர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினமும் கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்ட அக். 16ல் மழை பெய்யவே இல்லை. இந்நிலையில் ஒரு வாரமாக விட்டு விட்டு இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 8:00 மணி வரை ராஜபாளையம் 17 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்துார் 5 மி.மீ., விருதுநகரில் 9.40 மி.மீ., கோவிலான்குளத்தில் 15.80 மி.மீ., வெம்பக்கோட்டையில் 3 மி.மீ., அதிகபட்சமாக பெரியாறு பிளவக்கல்லில் 24.40 மி.மீ., அளவு மழை பதிவாகி உள்ளது. குடியிருப்பு சேதம் ஏதும் ஏற்படவில்லை.