ADDED : ஜூலை 28, 2025 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் பாலம் முடியும் இடத்தில் உள்ள வாறுகால் மூடி உடைந்து ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்காததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் மேம்பாலம் முடியும் இடத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு வாறுகால் மூடி உடைந்துள்ளது. இது மூடாமல் உள்ளதால் மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் ரோடு திரும்புபவர்கள் பள்ளத்தை கவனிக்காமல் வாறுகாலில் விழுந்து காயமடைகின்றனர்.
திருப்பங்களில் ஏற்கனவே விதிமீறல்கள் அதிகம் நடந்து வரும் சூழலில் இது போன்ற பள்ளங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. நகராட்சி நிர்வாகம் இதை சரி செய்ய வேண்டும். இது போன்று நகர் முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. அவற்றையும் கண்டறிந்து சரி செய்ய முன்வர வேண்டும்.