/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அவசியம்
/
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அவசியம்
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அவசியம்
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அவசியம்
ADDED : அக் 13, 2024 04:18 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் மதுரை அருப்புக்கோட்டை ரோடு, கள்ளிக்குடி திருச்சுழி ரோடு, ஒன்றிய அலுவலக ரோடு உள்பட பல்வேறு இடங்களில் ரோட்டோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க முக்கு ரோட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
காரியாபட்டி பேரூராட்சியில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. போதிய இட வசதி இருந்தும் ஆக்கிரமிப்புகளால் ரோடு சுருங்கி உள்ளது. மதுரை அருப்புக்கோட்டை ரோடு, கள்ளிக்குடி திருச்சுழி ரோடு, ஒன்றிய அலுவலக ரோடு, பஜார் பகுதி என ரோட்டோரத்தை ஆக்கிரமித்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்கின்றனர். பஸ் ஸ்டாண்டிலிருந்து செவல்பட்டியை கடக்க வாகன ஓட்டிகள் படாதபாடுபடுகின்றனர்.
கள்ளிக்குடி திருச்சுழி ரோடு இரு வழிச் சாலையாக உள்ளது. இப்பகுதியில் பள்ளிகள், அரசு மருத்துவமனை உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ரோட்டை அகலப்படுத்தி டிவைடர் வைக்க வேண்டி பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. டிவைடர் இல்லாததால் வாகன ஓட்டிகள் குறுக்கும், நெடுக்குமாக செல்கின்றனர். விபத்து அச்சம் உள்ளது.
மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் பிரிவு ரோட்டில் மேம்பாலம் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேம்பாலம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. அடிக்கடி நடக்கும் விபத்தால் உயிர் பலி ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க தேவையான இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
மேம்பாலம் வேண்டும்
வெள்ளைச்சாமி, விவசாயி:காரியாபட்டியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அச்சத்தில் வாகனங்களை ஓட்ட வேண்டிய நிலை உள்ளது. இதனை தவிர்க்க முக்கு ரோட்டில் நான்கு வழி மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை பிரிவு ரோட்டிலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் மேம்பாலம் கட்ட வேண்டும்.
நடவடிக்கை தேவை
பாஸ்கரன், விவசாயி: நகர் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடம் ஏராளமாக உள்ளது. ஆக்கிரமிப்பால் ரோடு சுருங்கியது. டூவீலர்கள், கார், லோடு வேன், வியாபாரிகள் வாகனம் என ரோட்டோரத்தில் நிறுத்தி போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மறுபடியும் ஆக்கிரமிப்பால் திணறி வருகின்றன. ஆக்கிரமிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காயம் ஏற்படுத்தும் உடைந்த சேர்கள்
முருகேசன், தனியார் ஊழியர்: பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நிழற்குடையில் சேர்கள் உடைந்துள்ளன. பயணிகள் உட்காரும்போது உடலில் காயம் ஏற்படுத்தும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. விபத்திற்கு முன் அவற்றை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அருப்புக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்களை நிழற்குடை அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.