/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலிதீனை உண்ணும் கால்நடைகள் உணவுக் கழிவோடு சேர்த்து குப்பையில் கொட்டுவதே கேடு
/
பாலிதீனை உண்ணும் கால்நடைகள் உணவுக் கழிவோடு சேர்த்து குப்பையில் கொட்டுவதே கேடு
பாலிதீனை உண்ணும் கால்நடைகள் உணவுக் கழிவோடு சேர்த்து குப்பையில் கொட்டுவதே கேடு
பாலிதீனை உண்ணும் கால்நடைகள் உணவுக் கழிவோடு சேர்த்து குப்பையில் கொட்டுவதே கேடு
ADDED : ஏப் 13, 2025 07:15 AM

விருதுநகர் : விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் கால்நடைகள் பாலிதீனை உண்பது அதிகரித்து வருகிறது. அவை வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் கழிவுகள் எடுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகி நோய்வாய்ப்படுகின்றன.
நகர்ப்பகுதிகளில் குடியிருப்புகள் பெருகும் அளவுக்கு பாலின் தேவையும் அதிகம் உள்ளது. இதனால் ஆவின், தனியார் பால் போக வீடுகளில் மாடு வளர்ப்போரும் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சிவகாசி மாநகராட்சி, விருதுநகர், ராஜபாளையம் நகராட்சிகளில் இவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகள் பாலிதீனை உண்பது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதன் உரிமையாளர்கள் சரிவர பராமரிக்காமல் வெளியே விட்டு விடுவதாலும், உணவு தேவைக்காகவும் அவை ரோட்டோரங்களில் உள்ள பாலிதீன் குப்பையை உண்கின்றன. பொதுவாக கால்நடைகள் பாலிதீனை விரும்பி உண்பதில்லை. மக்கள் வீசும் குப்பையில் உணவு பொட்டலங்கள் இருந்தாலோ, அழுகிய பழங்கள் இருந்தாலோ அதை உண்ணும் கால்நடைகள் பாலிதீனை சேர்த்தும் உண்கின்றன. இதனால் அந்த பாலிதீன் குப்பை கால்நடைகள் வயிற்றிலே தங்கி அவற்றிற்கு நோய் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது நகர்ப்பகுதிகளில் கட்டுப்பாடு இன்றி பெருகி வருவதால் மக்கள் பலர் பால் வாங்க அச்சப்படும் சூழல் உள்ளது.
டாக்டர்கள் கூறுகையில் கால்நடைகள் பாலித்தீனை உண்ணும் போது உணவுப்பாதையில் அடைப்பு ஏற்படும். சாணம் போடாது. உணவு எடுத்து கொள்ளாது. அறுவை சிகிச்சை செய்து அகற்றினாலும், இது போன்று பாலிதீனை உண்பது கால்நடைகளுக்கு தான் கேடாக முடிகிறது, என்றார்.

