/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தண்டவாளத்தில் கல் கிடந்தது குறித்து விசாரணை தீவிரம்
/
தண்டவாளத்தில் கல் கிடந்தது குறித்து விசாரணை தீவிரம்
தண்டவாளத்தில் கல் கிடந்தது குறித்து விசாரணை தீவிரம்
தண்டவாளத்தில் கல் கிடந்தது குறித்து விசாரணை தீவிரம்
ADDED : செப் 28, 2024 02:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கல் வைக்கப்பட்ட சம்பவம் குறித்து, கடையநல்லுார், பாம்பு கோயில் சந்தை சுற்றுவட்டார கிராமங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன் தென்காசி மாவட்டம் கடையநல்லுார்- -பாம்பு கோயில் சந்தை
ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட பகுதியில் சங்கனாப்பேரி என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த பொதிகை ரயில் இன்ஜின் டிரைவர் ரயிலின் வேகத்தை குறைத்து ஓட்டியதில் கல்லின் முனை உரசி ரயில் சங்கரன்கோவில் ஸ்டேஷன் வந்தடைந்தது. அன்றிரவே ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் அங்கு விசாரணையை துவக்கினர். சென்னை செல்லும் பொதிகை ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்பது குறித்து விசாரிக்க டி.எஸ்.பி., இளங்கோவன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இத்தனிப்படையினர் நேற்று கடையநல்லுார், பாம்பு கோயில் சந்தை, சிங்கலிபட்டி சுற்றுவட்டார கிராமங்களிலும், ரயில்வே வழித்தடத்தை ஒட்டி உள்ள குடியிருப்புகள், விவசாய நில உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்தனர். தென்காசி, விருதுநகர் மாவட்ட போலீசாரும் ரயில்வே பகுதிகளை கண்காணித்து வருகின்றனர்.