UPDATED : அக் 16, 2026 07:06 PM
ADDED : அக் 16, 2026 07:03 PM
சிவகாசி: சிவகாசி அருகே சித்துராஜபுரம் ஊராட்சியில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கென்று தனியாக ஒரு சமுதாயக்கூடம் கட்டித்தர அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாட்சியாபுரத்திலிருந்து ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்படும் சப் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றனர். மக்களுக்கு ஆதரவாக ஆதி தமிழர் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி., அனில் குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து சப் கலெக்டர் முகமது இர்பானிடம் மக்கள் மனு கொடுத்தனர். தனியாக சமுதாயக்கூடம் கட்டித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கொடுத்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.
