/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொடங்கும் ஆக்கிரமிப்பு--
/
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொடங்கும் ஆக்கிரமிப்பு--
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொடங்கும் ஆக்கிரமிப்பு--
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தொடங்கும் ஆக்கிரமிப்பு--
ADDED : ஏப் 27, 2025 07:13 AM

ராஜபாளையம் : ராஜபாளையம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாக மாறி வருவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோட்டில் நீண்ட கோரிக்கைக்குப்பின் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலத்தின் கீழ் தடையற்ற போக்குவரத்திற்காக நிலம் எடுப்பு செய்து சாலைகளை அகலப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலத்தின் தெற்கு பகுதி ஸ்ரீரெங்கபாளையம் முதல் கிழக்கு பகுதி டாஸ்மாக் பார் எதிரே வரையிலான மேம்பாலத்தின் கீழ்பகுதி இரவு கடைகள், டூவீலர் ஒர்க் ஷாப், வாகன நிறுத்துமிடம் என ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
ஏற்கனவே பாலத்தின் இரண்டு பக்கமும் விபத்தை தடுக்க ஒரு வழிப்பாதையாக மாற்றி வைத்துள்ள நிலையில் கீழ்பகுதியை பல்வேறு தரப்பும் ஆக்கிரமித்து தடை ஏற்படுத்துவதால் அவசர காலத்தில் ஒதுங்க வழியின்றி வாகன ஓட்டிகளுக்கு நிரந்தர சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
இது குறித்து ஹரிசங்கர் கூறியதாவது; முதலில் இரவு நேர கடைகள், வாகனங்கள் நிறுத்தும் இடமாக தொடங்கி தற்போது பகலிலும் ஆக்கிரமித்து நிரந்தரப்படுத்தி வைத்துவிட்டனர்.
டாஸ்மாக் கடை எதிரே நிரந்தர திறந்த வெளி பாராக மாற்றி வைத்துள்ளனர். தொடக்கத்திலேயே இது போன்ற விதிமீறலை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகங்கள் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.

