/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் தொடர்ந்து வீழும் பிளஸ் 2 அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்
/
மாவட்டத்தில் தொடர்ந்து வீழும் பிளஸ் 2 அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்
மாவட்டத்தில் தொடர்ந்து வீழும் பிளஸ் 2 அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்
மாவட்டத்தில் தொடர்ந்து வீழும் பிளஸ் 2 அரசு பள்ளி ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம்
ADDED : மே 17, 2025 12:46 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில்2023ல் 21 அரசு பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் அது குறைந்து 2024ல் 13, இந்தாண்டும் அதே 13 எண்ணிக்கையிலான பள்ளிகள் மட்டுமே நுாறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.
இதில் ஆண் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டு 89.39 சதவீதமாக பெற்ற நிலையில் இந்தாண்டு 1.02 சதவீதம் மட்டுமே அதிகரித்து 90.41 சதவீதம் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில்மாவட்டத்தில் 2022-23 கல்வியாண்டில் அதில் 21 அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. 2023-24ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 13 மட்டுமே நுாறு சதவீத தேர்ச்சி பெற்றன. இந்த 2024-25 கல்வியாண்டிலும் அதே 13 எண்ணிக்கையிலான அரசு பள்ளிகள் மட்டுமே நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
பொதுவாகவே அரசு பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகளில் குறைபாடு தொடர்பான பல்வேறு கற்பிதங்கள் இருந்தாலும், ஆசிரியர்கள் முடிந்தளவு தேவையான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை, போதிய ஆய்வக வசதி இல்லாமை போன்ற காரணங்களால் மாணவர்கள் பின் தங்கினாலும், பல ஆண்டுகளாக தேர்ச்சியில் முன்னேறி கொண்டே தான் இருந்தனர். ஆனால் தற்போது அதுவே மிகவும் குறைந்து வருவது அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் பலரை வேதனையடைய செய்துள்ளது.
ஆதிதிராவிட நலப்பள்ளிகள் 95.92 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. நகராட்சி பள்ளிகள் 93.13 சதவீதம் தேர்ச்சி. அரசு பள்ளிகள் 93.19சதவீதம் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளன.
இதில் மாணவிகளை(95.59 சதவீதம்) காட்டிலும் மாணவர்களின்(90.41) தேர்ச்சி சதவீதம் குறைவு. 2024ல் 89.39 சதவீத ஆண்மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். தற்போது 1.02 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அரசு பள்ளியில் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே தேர்ச்சி அடைவோரின் சதவீத வேறுபாடு 5 ஆக உள்ளது. இது பெரிய இடைவெளி. இது அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கற்றல் கற்பித்தலை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் இன்னும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அரசு பள்ளியில் படிக்கும் ஆண் மாணவர்கள் எங்கெங்கு கோட்டை விடுகின்றனர். அலைபேசி பயன்படுத்துவதில் கட்டுப்பாடு உள்ளதா, கேமிங் விளையாடி கவனச்சிதறல் குறைபாட்டிற்கு ஆளாகி உள்ளனரா என்பது போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.