/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுகாதார வளாகம், வாறுகால் இல்லாததால் சுகாதாரக்கேடு விருதுநகர் 11வது வார்டு மக்கள் அவதி
/
சுகாதார வளாகம், வாறுகால் இல்லாததால் சுகாதாரக்கேடு விருதுநகர் 11வது வார்டு மக்கள் அவதி
சுகாதார வளாகம், வாறுகால் இல்லாததால் சுகாதாரக்கேடு விருதுநகர் 11வது வார்டு மக்கள் அவதி
சுகாதார வளாகம், வாறுகால் இல்லாததால் சுகாதாரக்கேடு விருதுநகர் 11வது வார்டு மக்கள் அவதி
ADDED : மார் 04, 2024 04:42 AM

விருதுநகர்: பொது சுகாதார வளாகம், பாதாளச்சாக்கடை வசதி இல்லாததாலும், வாறுகால்களில் மண் நிறைந்து உள்ளதால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி ஏற்பட்ட சுகாதார சீர்கேடு, குடியிருப்பு பகுதியில் செயல்படும் குப்பை பிரித்தெடுக்கும் நிலையம், பொது நுாலகம், ரோடுகள் சேதம் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகின்றனர் விருதுநகர் மாரியப்பன் கோவில், ரயில்வே பீடர் ரோடு பகுதி மக்கள்.
விருதுநகர் நகராட்சியின் 11 வது வார்டில் ரயில்வே பீடர் ரோடு, சிவசங்கரத்தெரு, காந்திபுரம் தெரு, மாரியம்மன் கோவில் தெருக்கள் ஆகிய பகுதிகள் உள்ளன.
பொது சுகாதார வளாகம் இல்லாத ஒரே வார்டு இந்த 11 வது வார்டு மட்டுமே. பங்குனி பொங்கல் விழாவின் போது மக்கள் பலர் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வந்து கலந்து கொள்ள வந்து செல்கின்றனர். இவர்களுக்கான பொது சுகாதார வளாகம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.
இப்பகுதியில் உள்ள எந்த வீடுகளுக்கும் பாதாளச்சாக்கடை வசதி ஏற்படுத்தி தரவில்லை. நகராட்சி பகுதியாக இருந்தும் பாதாளச்சாக்கடை வசதிகள் வீடுகளுக்கு வழங்கப்படாதை பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை.
தந்திமரத்தெரு, சிவசங்கர் தெரு, காந்திபுரத்தெருக்களில் உள்ள வாறுகால் அமைத்து 30 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த வாறுகால்கள் தாழ்வானதாகவும், மண் நிறைந்தும் காணப்படுவதால் மழைக்காலங்களில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நகராட்சி வாசக சாலை பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது.
வீடுகளுக்கு பாதாளச்சாக்கடை வசதி வழங்கப்படாததால் கழிவு நீர் வெளியேற்றுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட வாறுகாலை சீரமைத்து புதியதாக ஏற்படுத்த வேண்டும்.
- ஜெயந்தி, குடும்பத்தலைவி.
நகராட்சியின் மற்ற வார்டுகளில் பொது சுகாதார வளாகம் உள்ளது. பங்குனி பொங்கல் விழாவின் போது வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் பலரும் கழிவறைக்காக அல்லல் படுகின்றனர். எனவே பொது சுகாதார வளாகத்தை உடனடியாக கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- -லெனின், அ.தி.மு.க., வார்டு செயலாளர்.
இந்த பகுதியில் நகராட்சி குப்பை பிரித்தெடுக்கும் கிடங்கு செயல்படுகிறது. சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் துார்நாற்றத்தால் மூச்சுத்திணறலில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- மகேந்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்.

