/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் சிகரெட் கேட்டு கையை கத்தியால் அறுத்துக் கொண்ட கைதி தடுக்க முயன்ற போலீசார் காயம்

ADDED : செப் 22, 2024 02:23 AM
சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் நீதிமன்றத்தில் கஞ்சா வழக்கில் கைதான அழகுராஜை28, ஆஜர்படுத்தி விட்டு திரும்ப அழைத்து சென்றபோது போலீசாரிடம் சிகரெட் கேட்ட அவர் தனது கையை தானே கத்தியால் அறுத்துக் கொண்டு போலீசாரையும் காயப்படுத்தினார்.
சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் அழகுராஜ், மதுரையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 25. இருவரும் கஞ்சா வழக்கில் கைதாகி மதுரை சிறையில் உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு சாத்துார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இருவரையும் சிவகாசி ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ராஜமயில், லட்சுமணன், ஞான குருசாமி, ஆகியோர் சாத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மதுரை சிறைச்சாலைக்கு செல்வதற்காக அழைத்துச் சென்ற போது பழையபடந்தால் ரோட்டில் நடந்து சென்ற கைதி அழகுராஜ் போலீசாரிடம் தனக்கு சிகரெட் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். போலீசார் மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அங்கிருந்த டீக்கடைக்குள் புகுந்து கத்தியால் தனது இடது கையை அறுத்துக் கொண்டார். இதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் ராஜா மயில் கையில் கத்தி குத்தியதில் காயம் ஏற்பட்டது. உடன் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் ஞானகுருசாமி, லட்சுமணன் ஆகியோர் அழகுராஜை மடக்கிப் பிடித்தனர். அப்போது அழகுராஜ் தாக்கியதில் போலீஸ்காரர் ஞான குருசாமியும் ஊமைக் காயமடைந்தார். அழகுராஜ் ,போலீசார் சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணை நடக்கிறது.