/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு காட்சி
/
திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு காட்சி
ADDED : ஆக 09, 2025 11:32 PM

திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றில் அம்பாளுக்கு தபசு காட்சி கொடுத்த நிகழ்ச்சி நடந்தது.
திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் ஆடி தபசு விழா ஜூலை 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழாவில் சுவாமி, அம்பாள் அன்னம், மயில், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடந்தது. 10ம் நாள் நிகழ்வாக நேற்று முன்தினம் மாலை ஆடி தபசு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் மாலை பக்தர்கள் சூழ திருமேனிநாதருக்கும் துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அம்பாள் சுவாமியை 3 முறை வலம் வந்து ஆடி தபசு கொடுக்கும் காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். சுவாமி, அம்மன் திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து பின் புறப்பட்டு கோயிலை அடைந்தனர். சுற்றியுள்ள கிராமங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.