/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அ.தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்ட சீர் மரபினர் நல வாரியம் : அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
/
அ.தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்ட சீர் மரபினர் நல வாரியம் : அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
அ.தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்ட சீர் மரபினர் நல வாரியம் : அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
அ.தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்ட சீர் மரபினர் நல வாரியம் : அமைச்சர் மெய்யநாதன் பேச்சு
ADDED : ஜூன் 24, 2025 03:01 AM
ராஜபாளையம்: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முடக்கப்பட்டு இருந்த சீர் மரபினர் நல வாரியம் சீரமைக்கப்பட்டது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
ராஜபாளையத்தில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்தனர்.நல வாரிய துணைத்தலைவர் ராசா அருண்மொழி வரவேற்றார்.
அமைச்சர் மெய்ய நாதன் பேசியதாவது: 68 சமூக மக்களின் மேம்பாட்டுக்காக 2007-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்ட சீர் மரபினர் நல வாரியம், கடந்த அ.தி.மு.க., வேண்டும் ஆட்சியில் முடக்கப்பட்டு இருந்தது.
ஆட்சிக்கு வந்ததும் நல வாரியம் சீரமைக்கப்பட்டு 91 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சி அமைந்த உடன் பொறியியல், சட்டம், கால்நடை வேளாண் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்தவர் முதல்வர். அதன் மூலம் உயர் கல்வியில் சேர்ந்த 40 ஆயிரத்து 210 அரசு பள்ளி மாணவர்களுக்கு 911 கோடி கல்வி கட்டணத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் அரசு வழங்குகிறது என்றார்.
அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க., விற்கு உள்ள அக்கறை வேறு எந்த கட்சிக்கும் இல்லை என்றார்.
2100 பேருக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை, 48 பேருக்கு இஸ்திரி பெட்டி, 5 பேருக்கு தையல் இயந்திரம், 6 பேருக்கு தனிநபர் கடன் உதவி, 23 பேருக்கு ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை என 2184 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சம்பத், எம்.பி., ராணி, எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், மேயர் சங்கீதா, நகராட்சி தலைவர்கள் ரவிகண்ணன், பவித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.