sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரேஸ் வாகனமாக டூவீலர் மாற்றம்; அச்சுறுத்தும் வேகத்தால் ஆபத்து; தேவை டிராபிக், வட்டார போக்குவரத்து துறையினரின் கடிவாளம்

/

ரேஸ் வாகனமாக டூவீலர் மாற்றம்; அச்சுறுத்தும் வேகத்தால் ஆபத்து; தேவை டிராபிக், வட்டார போக்குவரத்து துறையினரின் கடிவாளம்

ரேஸ் வாகனமாக டூவீலர் மாற்றம்; அச்சுறுத்தும் வேகத்தால் ஆபத்து; தேவை டிராபிக், வட்டார போக்குவரத்து துறையினரின் கடிவாளம்

ரேஸ் வாகனமாக டூவீலர் மாற்றம்; அச்சுறுத்தும் வேகத்தால் ஆபத்து; தேவை டிராபிக், வட்டார போக்குவரத்து துறையினரின் கடிவாளம்


ADDED : அக் 02, 2025 03:38 AM

Google News

ADDED : அக் 02, 2025 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நகர்ப்பகுதிகளில் இளைஞர்கள் தங்களின் டூவீலர்களை ரேஸ்மோடிபிகேஷனுக்கு ஏற்ப வாகனங்களை மறு வடிவமைப்பு செய்வதோடு, அச்சுறுத்தும் வகையில் வேகமாக இயக்குவதால் சக வாகன ஒட்டிகள் பதறுகின்றனர்.

இந்தியாவிலே தமிழகத்தில் தான்அளவில் அதிகளவில் சாலைவிபத்துக்கள் நடப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தொழில் வளர்ச்சி, வாகனங்களின் பெருக்கம், மக்களின் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக டூவீலர்கள் மாறிவிட்டன.

இவ்வாறு செல்லும் பலர் பிரதான ரோடுகளில் 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் தான் செல்கின்றனர். அதே போல் நான்கு வழிச்சாலைகளில் செல்லும் போது 50 முதல் 80 கி.மீ., வேகம் வரை செல்கின்றனர்.

ஆனால் விருதுநகர் மாவட்ட நகர்ப்பகுதிகளில் ராஷ் டிரைவிங் எனப்படும் அச்சுறுத்தலாக வாகனங்களை ஓட்டுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஓட்டுவோரின் வாகனங்கள் மோடிபிகேஷன் எனும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. அதாவது பின் பெரிதான பின் டயரை பொருத்துவது, அலறும் சைலன்ஸர் சத்தம், நிறங்களை மாற்றி அமைப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை செய்கின்றனர். இதற்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இதற்கு போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர் தரப்பில் குறைந்த அளவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பல இளைஞர்களுக்கு ரேஸ் வாகனங்கள் வாங்கி அதிவேகமாக ஓட்ட ஆசை. இதற்காக சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு சென்று ரேஸ் மோடிபிகேஷன் செய்து வேகமாக செல்வதற்கு ஏற்றாற்போல் டூவீலர்களை வடிவமமைக்கின்றனர்.

வாகன நிறம் மாற்றினால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட டயர் விகிதத்தை தவிர வேறு அளவில் பயன்படுத்தக் கூடாது.

இன்ஜினின் சக்தியை மாற்றக் கூடாது போன்றவை எல்லாம் முக்கிய விதிகள். அவை தற்போது காற்றில் பறக்கவிடுவது அதிகரித்து வருகிறது.

சாதாரண ரோடுகளில் அதிவேகமாக செல்வது, சாகசம் செய்வது போன்ற விதிமீறல்களை செய்து விபத்தை ஏற்படுத்துகின்றனர்.

ரேஸ் அது தொடர்பான வாகனங்கள், அதற்காக டிராக்குகள் தனித்தனியே உள்ளன. அந்த வாகனங்கள் அவற்றில் இயக்கவே தகுதியானவை.

ஆனால் புரிதல் இன்றி பல இளைஞர்கள் வாகன மோகத்தில் வடிவமைப்பு செய்து சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகின்றனர். இந்த கலாசாரம் சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்துார் பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

இதை வட்டார போக்குவரத்து துறையும், டிராபிக் போலீசாரும் இணைந்து கட்டுப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us