/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால் அமைத்தும் பேவர் பிளாக் பதிக்க நிதி ஒதுக்காததால் பாதியில் நிற்கும் பணிகள்

ADDED : செப் 20, 2024 06:14 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி மதுரை ரோட்டில் வாறுகால் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிந்த நிலையில், ரோடு ஓரங்களில் பேவர் பிளாக் கல் பதிக்க நிதி ஒதுக்காததால் பணிகள் பாதியில் நிற்கிறது.
அருப்புக்கோட்டை இருந்து ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் இருந்து பாலையம்பட்டி வரையுள்ள மதுரை ரோட்டில் இருபுறமும் 2 கி.மீ., தூரத்திற்கு வாறுகால் அமைக்க ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. ஆனால் பேவர் பிளாக் கற்கள் பதிக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்காததால் பணி பாதியில் நிற்கிறது. இதனால் ரோட்டில் இருந்து வாறுகாலை தாண்டி புறநகர் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகளும் அவதிப்படுகின்றனர்.
மேலும் மழைக் காலமானால் வாறுகாலுக்கும், ரோட்டில் இருக்கும் இடையுள்ள பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கிவிடும் நிலை ஏற்படும். ஆக்கிரமிப்புகளும் சிறிது சிறிதாக வர துவங்கியுள்ளன. நெடுஞ்சாலை துறையினர் பேவர் பிளாக் கல் பதிப்பதற்குரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும்.