ADDED : மே 19, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : குல்லுார்சந்தையில் குரு மொபைல்ஸ் என்ற அலைபேசிகள் விற்பனை, சர்வீஸ் செய்து கொடுக்கும் கடை உள்ளது.
இந்த கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூட்டிச் சென்றனர். நேற்று காலை கடையை திறந்த போது பின்பக்க தகர செட் பிரிக்கப்பட்டு கடை உள்ளே இருந்த பணம், அலைபேசிகள் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.